Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விரைவில் குணமடைய வெனிசுலா அதிபர் வாழ்த்து

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விரைவில் குணமடைய வெனிசுலா அதிபர் வாழ்த்து

By: Karunakaran Tue, 06 Oct 2020 08:40:46 AM

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விரைவில் குணமடைய வெனிசுலா அதிபர் வாழ்த்து

அமெரிக்காவில் கொரோனா பரவலுக்கு மத்தியில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகின்றார். இதனால் அங்கு தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் டிரம்ப் நாடு முழுவதும் பல்வேறு மாகாணங்களுக்கு சென்று சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார் .

இந்நிலையில், அவருக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது கடந்த வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், டிரம்ப் தற்போது ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். டிரம்பும் அவரது மனைவி மெலனியாவும் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைய உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

us,trump,venezuelan president,recovery ,அமெரிக்கா, டிரம்ப், வெனிசுலா அதிபர், மீட்பு

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை தனது பரம எதிரியாக பாவித்து வரும் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எந்தவொரு நபரும் வைரஸ் தொற்றுக்கு ஆளாவதை நாங்கள் விரும்பவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெனிசுலாவின் எதிரியாக இருந்தாலும் அவருடன் நாங்கள் எங்கள் மனித ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும், அதிபர் டிரம்ப் விரைவில் குணமடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். வெனிசுலாவில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் அமெரிக்கா அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. இதனால் டிரம்ப் மற்றும் நிகோலஸ் மதுரோ இடையே பகைமை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|