Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் இந்தியாவுக்கு எதிரானவர் - டிரம்ப் ஜூனியர் விமர்சனம்

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் இந்தியாவுக்கு எதிரானவர் - டிரம்ப் ஜூனியர் விமர்சனம்

By: Karunakaran Tue, 20 Oct 2020 1:10:42 PM

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் இந்தியாவுக்கு எதிரானவர் - டிரம்ப் ஜூனியர் விமர்சனம்

அமெரிக்காவில் அடுத்த மாதம் 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் களம் இறக்கப்பட்டுள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜோ பைடன் சீனாவின் ஆதரவாளர் என்றும் தேர்தலில் அவர் வெற்றி பெற்றால் அமெரிக்காவை சீனா தன் வசமாக்கிக்கொள்ளும் என்றும் ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். ஜோ பைடனை வெற்றிபெற செய்ய அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சீனாவின் தலையீடு இருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்துள்ளது. ஆனால் தான் ஒருபோதும் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதில்லை என்று கூறி ஜோ பைடன் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார்.

us,presidential candidate,joe biden,trump jr ,அமெரிக்கா, ஜனாதிபதி வேட்பாளர், ஜோ பிடன், டிரம்ப் ஜூனியர்

இந்நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து டிரம்ப் ஜூனியர் எழுதிய புத்தகத்தின் வெற்றிவிழா நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில் டிரம்பின் ஆதரவாளர்களான இந்திய வம்சாவளியினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய டிரம்ப் ஜூனியர், சீனாவின் அச்சுறுத்தலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய அமெரிக்கர்களை தவிர வேறு யாரும் அதை பற்றி சிறப்பாக அறிந்திருக்க மாட்டார்கள் என்று கூறினார்.

மேலும் அவர், ஜோ பைடனின் மகனான ஹண்டர் பைடனுக்கு சீனா 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுத்தது. ஏனென்றால் பைடன்களை விலைக்கு வாங்க முடியும் என்பதை சீனா அறிந்திருந்தது. அதனால்தான் ஜோ பைடன் சீனாவிடம் மென்மையாக நடந்து கொள்கிறார். அதேசமயம் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதால் அவர் இந்தியாவுக்கு எதிரானவராக உள்ளார். இந்திய சமூகம் என் இதயத்திற்கு அருகில் உள்ளது. கல்வி சார்ந்ததாயினும் சரி, குடும்பம் சார்ந்ததாயினும் சரி இந்திய சமூகத்தின் கடின உழைப்பு அளப்பரியது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவின் ஆமதாபாத்தில் நடந்த பேரணியில் பிரதமர் மோடியுடன் எனது தந்தையின் உற்சாகத்தை பார்த்தபோது, அதுவே மிகப்பெரிய பேரணி என்பதை உணர்ந்தேன் என தெரிவித்தார்.

Tags :
|