Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திபெத் அணுகல் சட்டத்தின் கீழ் சீனாவின் மூத்த அரசு அதிகாரிகளுக்கு விசா வழங்க அமெரிக்கா கட்டுப்பாடு

திபெத் அணுகல் சட்டத்தின் கீழ் சீனாவின் மூத்த அரசு அதிகாரிகளுக்கு விசா வழங்க அமெரிக்கா கட்டுப்பாடு

By: Karunakaran Thu, 09 July 2020 12:14:58 PM

திபெத் அணுகல் சட்டத்தின் கீழ் சீனாவின் மூத்த அரசு அதிகாரிகளுக்கு விசா வழங்க அமெரிக்கா கட்டுப்பாடு

திபெத் பகுதிக்குள் சீனாவின் ஆக்கிரமிப்பும், அதிகாரமும் உள்ளது. இதனால் அங்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், அமெரிக்க மக்கள், பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் யாரையும் நுழைய சீனா அனுமதிப்பதில்லை. அரசு முறைப் பயணமாக அமெரிக்க அதிகாரிகள் திபெத் செல்ல முயன்றாலும் சீன அனுமதி கொடுப்பதில்லை.

இதனால், கடந்த 2018-ம் ஆண்டு திபெத் அணுகல் சட்டத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. ஆனால் இதனை நடைமுறைப்படுத்தாமல் இருந்தது. இந்த சட்டப்படி திபெத்துக்குள் அமெரிக்க மக்களை அனுமதிக்க மறுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், சீனாவின் முக்கிய அதிகாரிகளுக்கும் விசா வழங்குவதில் அமெரிக்கா கட்டுப்பாடுகளை கொண்டுவரும்.

tibet access act,america,china,visa,senior government official ,திபெத் அணுகல் சட்டம், அமெரிக்கா, சீனா, விசா, மூத்த அரசு அதிகாரி

தற்போது திபெத் அணுகல் சட்டத்தின் கீழ் சீனாவின் மூத்த அரசு அதிகாரிகள் பலருக்கு விசா வழங்க அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று முன்தினம் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ அறிவித்தார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா, ஹாங்காங் விவகாரத்தில் தலையிடுவதை காரணம் காட்டி அமெரிக்க மக்களுக்கு விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதுதொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொருளாதார தடைகள் என்கிற பெயரில் ஹாங்காங்கின் தேசிய பாதுகாப்பை பாதுகாப்பதற்கான சீனாவின் சட்டத்தை தடுக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. ஹாங்காங் விவகாரத்தில் தலையிடும் அமெரிக்க மக்களுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|