Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவின் பாதுகாப்பு துறை மந்திரி மார்க் எஸ்பரை பதவியில் இருந்து அதிரடியாக நீக்கம்

அமெரிக்காவின் பாதுகாப்பு துறை மந்திரி மார்க் எஸ்பரை பதவியில் இருந்து அதிரடியாக நீக்கம்

By: Karunakaran Tue, 10 Nov 2020 08:33:24 AM

அமெரிக்காவின் பாதுகாப்பு துறை மந்திரி மார்க் எஸ்பரை பதவியில் இருந்து அதிரடியாக நீக்கம்

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும் அவர் அமெரிக்கா முறைப்படி, 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தான் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார். அதுவரை அதிபர் டிரம்ப் அதிபர் பதவியில் நீடிப்பார். இந்நிலையில், மார்க் எஸ்பரை பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் அதிபர் டொனால்டு டிரம்ப்.

இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்புத் துறை மந்திரியாக பதவி வகித்து வந்தவர் மார்க் எஸ்பர். அவருக்கு பதிலாக தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் கிரிஸ்டோபர் மில்லர் அப்பதவிக்கு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

america,secretary of defense,mark esper,trump ,அமெரிக்கா, பாதுகாப்பு செயலாளர், மார்க் எஸ்பர், டிரம்ப்

இதுகுறித்து அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், மார்க் எஸ்பர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர்மில்லர் அந்த பதவிக்கு நியமிக்கப்படுகிறார். அவர் பாதுகாப்பு துறையின் பொறுப்பு அமைச்சராக உடனடியாக பதவி ஏற்கிறார். எஸ்பரின் பணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே அக்டோபர் மாத இறுதி வாரத்தில் மார்க் எஸ்பர் இந்தியா வந்திருந்தார். அமெரிக்க அதிபர் தேர்தல் நேரத்தில் அவர் டெல்லி வந்தது முக்கியத்துவமாக கருதப்பட்டது. இந்நிலையில் மார்க் எஸ்பர் பாதுகாப்பு துறையின் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :