Advertisement

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று சீனா பயணம்

By: Nagaraj Sun, 18 June 2023 9:10:41 PM

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று சீனா பயணம்

பெய்ஜிங்: இன்று சீனா பயணம்... அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோணி பிளின்கன் 2 நாள் பயணமாக இன்று சீனா செல்கிறார். இந்தப் பயணத்தின் போது, உயர்மட்டக் கூட்டத்தில் நாட்டுத் தலைவர்களைச் சந்திக்கிறார்

5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஒருவர் சீனாவுக்குச் செல்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் அவர் சீனாவுக்குச் செல்லவிருந்த நிலையில், உளவு பலூன் விவகாரம் அதனைத் தடுத்தது. சந்தேகத்திற்குரிய சீன உளவு பலூன் அமெரிக்க மற்றும் கனேடிய வான்வெளியில் பறந்தபோது, பிடென் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் அதை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டது.

china,foreign-minister,tourism,us, ,அமெரிக்கா, சீனா, சுற்றுப்பயணம், வெளியுறவு அமைச்சர்

இதையடுத்து 2 உளவு பலூன்கள் அடுத்தடுத்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதனைக் கருத்தில் கொண்டு அந்தோணி பிளிங்கனின் சீனப் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தச் சூழலில், பிளிங்கனின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. இன்று காலை அவர் சீனா சென்றடைந்தார். பின்னர், சீனாவின் உயர்மட்ட வெளியுறவுக் கொள்கை அதிகாரி வாங் யீ, அமெரிக்க வர்த்தகத் தலைவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார்.

அதேபோல், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேரில் சந்திக்கவுள்ளதாக தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. இந்த பயணத்திற்கு முன் தொலைபேசி உரையாடலில், பிளிங்கனை தொடர்பு கொண்ட சீன வெளியுறவு மந்திரி குவின் கேங், சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் அதனை அமெரிக்கா நிறுத்தி கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து பேசினார் என்றும் தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்து உள்ளது.

Tags :
|
|