Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள்... அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் கூட்டாக கண்டனம்

வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள்... அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் கூட்டாக கண்டனம்

By: Nagaraj Sun, 16 July 2023 2:57:12 PM

வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள்... அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் கூட்டாக கண்டனம்

வடகொரியா: உலக நாடுகள் கண்டனம்... வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டின் போது அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அண்டனி பிளிங்கன், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி மற்றும் தென் கொரிய வெளிவிவகார அமைச்சர் பார்க் ஜின் ஆகியோர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

joint statement,united states,south korea,regulations,un security ,கூட்டு அறிக்கை, அமெரிக்கா, தென் கொரியா, விதிமுறைகள், ஐநா பாதுகாப்பு

அண்மையில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்தது, கிழக்கு கடற்கரை பகுதியில் ஏவப்பட்ட இந்த ஏவுகணை சுமார் 1000 கிலோமீட்டர் தூரத்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணித்தது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் பல விதிமுறைகளை வடகொரியா தெளிவாக மீறியுள்ளதாக அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :