Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரிய எல்லையில் அமெரிக்கா- தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி

கொரிய எல்லையில் அமெரிக்கா- தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி

By: Nagaraj Wed, 19 Aug 2020 8:02:52 PM

கொரிய எல்லையில் அமெரிக்கா- தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி

கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய இரு நாடுகளும் கொரிய எல்லையில் கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கி உள்ளன.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடந்த 8 மாதங்கள் ஆகியும் குறைந்தபாடில்லை. இதற்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் முழு ஊரடங்கு, தனிமனித இடைவெளி ஆகியவையே வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகளாக உள்ளன.

கொரோனா காரணமாக உலகின் பல முக்கிய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன. இந்நிலையில், கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய இரு நாடுகளும் கொரிய எல்லையில் கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கி உள்ளன.

korean peninsula,tension,us,south korea,military training ,
கொரிய தீபகற்பம், பதற்றம், அமெரிக்கா, தென்கொரியா, ராணுவ பயிற்சி

உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியில் இரு நாட்டு ராணுவமும் கொரிய எல்லையில் வருடாந்திர ராணுவ பயிற்சியை தொடங்கி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதமும், ஆகஸ்டு மாதமும் இரு நாடுகளும் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

கொரோனா தொற்று காரணமாக மார்ச் மாதம் நடக்க வேண்டிய கூட்டு ராணுவ பயிற்சி ரத்து செய்யப்பட்டது. ஆகஸ்டு மாத கூட்டு ராணுவ பயிற்சியும் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து இந்த கூட்டு ராணுவ பயிற்சி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ தளங்களில் கொரோனா பரவாமல் இருக்க இந்த மாத இறுதி வரை ராணுவ வீரர்கள் விடுமுறையில் செல்வதற்கு தென்கொரிய ராணுவம் தடை விதித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடுவதற்கு வடகொரியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த கூட்டு ராணுவ பயிற்சி கொரிய தீபகற்பத்தில் மேலும் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.

Tags :
|