Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவானில் இருந்து புறப்பட்டார்

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவானில் இருந்து புறப்பட்டார்

By: Nagaraj Thu, 04 Aug 2022 10:06:37 AM

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவானில் இருந்து புறப்பட்டார்

அமெரிக்கா: தைவானில் இருந்து புறப்படார்... தைவான் வந்த அமெரிக்க கீழவை சபாநாயகர் நான்சி பெலோசி தனது பயணத்தை முடித்துக்கொண்டு அந்நாட்டில் இருந்து புறப்பட்டார்.

இரண்டு நாள் பயணமாக நேற்றிரவு தைவான் வந்த நான்சி பெலோசி, இன்று அந்நாட்டு அதிபர் சாய் இங்வென்-ஐ அதிபர் மாளிகையில் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய சாய் இங்வென், தைவானின் மிக முக்கிய நண்பர்களில் ஒருவர் பெலோசி என்றும், தைவானுக்கு அசைக்க முடியாத ஆதரவை அளித்துள்ள அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

ஜனநாயக நாடான தைவானுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள், தங்கள் நாட்டின் பாதுகாப்பு மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக சாய் இங்வென் சீனாவை மறைமுகமாகக் குறிப்பிட்டார். தைவான் ஒருபோதும் அடிபணியாது என தெரிவித்த சாய், தங்கள் நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றார்.

america,taiwan,economy,reception,delegations ,அமெரிக்கா, தைவான், பொருளாதாரம், வரவேற்பு, தூதுக்குழுவினர்

இதையடுத்து நான்சி பெலோசி ஆற்றிய உரையில், அமெரிக்கா தான் அளித்த வாக்குறுதியை ஒருபோதும் கைவிடாது என்பதை தனது பயணம் உணர்த்தி இருப்பதாகக் குறிப்பிட்டார். தைவானுடனான நட்பை அமெரிக்கா பெருமையுடன் கருதுவதாகவும் அவர் கூறினார்.

முன் எப்போதும் இல்லாத அளவு, தைவானுடனான அமெரிக்காவின் நட்புணர்வு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க சபாநாயகர், இந்த செய்தியை தான் தற்போது கொண்டு வந்திருப்பதாகக் கூறினார். அமெரிக்காவின் இரு பெரும் கட்சிகளான ஜனநாயக கட்சியும் குடியரசு கட்சியும் தைவான் விஷயத்தில் ஒன்றிணைந்து ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தனது தைவான் பயணத்தை முடித்துக்கொண்ட நான்சி பெலோசி, அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தனது தலைமையில் தைவான் வந்த அமெரிக்க தூதுக்குழுவினருக்கு தைவான் அதிபர் அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா –தைவான் இடையே பொருளாதார மற்றும் பாதுகாப்பு ரீதியிலான உறவை வலுப்படுத்துவது குறித்து தைவான் அதிபருடன் விரிவாக ஆலோசித்ததாகவும், இருவரும் ஜனநாயக மதிப்பீடுகளை பகிர்ந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|