Advertisement

தைவானுக்கு அமெரிக்கா கொடுத்துள்ள ஆதரவு

By: Nagaraj Sun, 07 Aug 2022 7:46:53 PM

தைவானுக்கு அமெரிக்கா கொடுத்துள்ள ஆதரவு

தைவான்: சீனா - தைவான் ஆகிய இரு நாடுகளுக்குமிடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலும், தைவான் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்குச் சென்றார். இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீனா, தனது போர் விமானங்களை தைவான் வான் எல்லைக்குள் அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளது.

taiwan president,twitter,page,missile,combat training,tension situation ,தைவான் அதிபர், டுவிட்டர், பக்கம், ஏவுகணை, போர் பயிற்சி, பதற்ற நிலைமை

தைவானின் எல்லைப்பகுதியில் சீனா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது குறித்து தைவான் அதிபர் சாய் இங்-வென் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது: "சீனாவின் ராணுவ பயிற்சிகள் மற்றும் போர் நடவடிக்கைகளை தைவான் அரசும், ராணுவமும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. சீன ராணுவ பயிற்சிகள் மற்றும் போர் நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி தயாராக உள்ளன.

சீன ராணுவம் தைவான் எல்லைப் பகுதியில் ஏவுகணைகளை வீசி போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் தைவான் பிராந்தியத்தில் போர் பதற்ற நிலைமை அதிகரிப்பதைத் தடுக்க சர்வதேச ஆதரவை வழங்க வேண்டும். என்று தைவான் அதிபர் சாய் இங்-வென் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Tags :
|