Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனா அரசு அதிகாரிகள், ஆளும் கட்சியினருக்கு விசா வழங்க அமெரிக்கா கடும் கட்டுப்பாடு

சீனா அரசு அதிகாரிகள், ஆளும் கட்சியினருக்கு விசா வழங்க அமெரிக்கா கடும் கட்டுப்பாடு

By: Nagaraj Wed, 08 July 2020 5:49:24 PM

சீனா அரசு அதிகாரிகள், ஆளும் கட்சியினருக்கு விசா வழங்க அமெரிக்கா கடும் கட்டுப்பாடு

சீனாவின் அரசு அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினருக்கு அமெரிக்காவில் விசா வழங்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அறிவித்துள்ளார். கொரோனா விவகாரத்தில் இருந்து சீனா மீது கடும் கோபத்தில் அமெரிக்கா உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திபெத்தின் பகுதிகளில் வெளிநாட்டவர் வருவதற்கு கட்டுப்பாடுகளை அதிகாரிகளும், சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் அமல்படுத்தி வருவது, மனித உரிமை மீறல்களுக்கு இடம் கொடுத்திருப்பதாக மைக் பாம்பியோ விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

asia,usa,visa,heavy control,mike pompeo ,ஆசியா, அமெரிக்கா, விசா, கடும் கட்டுப்பாடுகள், மைக் பாம்பியோ

ஆசியாவின் முக்கியமான நதிகளில் சுற்றுச்சூழலைக் காக்கத் தவறிவிட்டதாகவும் சீனா மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனால் சீனாவின் அரசு அதிகாரிகள், கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரிகளுக்கு விசா வழங்கப்படப் போவதில்லை என்று மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். கொரோனா குறித்த தகவல்கள் சீனா மறைத்து விட்டது. துரோகம் இழைத்து விட்டது என்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிபர் டிரம்ப் மீண்டும் சீனா மீது குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் சீன ஆளும் கட்சியினர் மற்றும் அதிகாரிகளுக்கு விசா வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகளை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது. மேலும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சீன செயலிகளுக்கான தடை விதிப்பை போன்று அமெரிக்காவிலும் நடைமுறைப்படுத்த ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|