Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க போர் விமானம் ஈரான் விமானத்தின் அருகில் பறந்தது சட்டவிரோதமானது - ஈரான் குற்றச்சாட்டு

அமெரிக்க போர் விமானம் ஈரான் விமானத்தின் அருகில் பறந்தது சட்டவிரோதமானது - ஈரான் குற்றச்சாட்டு

By: Karunakaran Sat, 25 July 2020 5:25:19 PM

அமெரிக்க போர் விமானம் ஈரான் விமானத்தின் அருகில் பறந்தது சட்டவிரோதமானது - ஈரான் குற்றச்சாட்டு

ஈரான் தெஹ்ரானில் இருந்து நேற்று முன்தினம் துருக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம், சிரியா எல்லையில் சென்றபோது திடீரென அமெரிக்க போர் விமானம் மிக அருகில் இடைமறிப்பது போன்று வந்தது. இதனை சுதாரித்த விமானி விமானத்தின் உயரத்தை சட்டென்று குறைத்தார்.

இதன் காரணமாக, சில விமானிகள் காயம் அடைந்தனர். அதன்பின், விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இதுகுறித்து அமெரிக்கா கூறுகையில், போர் விமானம் அருகில் சென்றது உண்மைதான். ஆனால் 1000 மீட்டர் இடைவெளி இருந்தது என்று தெரிவித்தது. 100 மீட்ட இடைவெளி மட்டுமே இருந்ததாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

iran,mohammad javad zarif,us warplane,iranian plane ,ஈரான், முகமது ஜவாத் ஸரீஃப், அமெரிக்க போர் விமானம், ஈரானிய விமானம்

இந்நிலையில் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது ஜாவத் ஜரிஃப் கூறுகையில், அமெரிக்கா சட்டவிரோதமாக மற்ற நாடுகளின் பிராந்தியத்தை ஆக்கிரப்பு செய்கிறது. ஆக்கிரப்பு இடத்தில் படைகளை பாதுகாக்க அப்பாவி பொதுமக்கள், பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் திட்டமிடப்பட்ட சிவில் விமானத்தை துன்புறுத்துவதாக கூறினார்.

மேலும் இதுகுறித்து ஈரான் போக்குவரத்துத்துறை மந்திரி, இது ஒரு பயங்கரவாத நடவடிக்கை, இதுகுறித்து நாங்கள் சர்வதேச பொது விமான போக்குவரத்து அமைப்பிடம் புகார் அளிப்போம். இது அமெரிக்க அரசாங்கத்தின் பயங்கரவாதச் செயலைக் கண்டிக்க வழிவகுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.

Tags :
|