Advertisement

கொரோனா தடுப்பூசி நிபந்தனையை நீக்கியது அமெரிக்கா

By: Nagaraj Tue, 02 May 2023 10:37:31 PM

கொரோனா தடுப்பூசி நிபந்தனையை நீக்கியது அமெரிக்கா

அமெரிக்கா: நிபந்தனையை நீக்கிய அமெரிக்கா... வெளிநாட்டுப் பயணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை அமெரிக்கா நீக்கியுள்ளது.

2020 இல், கொரோனா வைரஸ் உலகையே முடக்கியது. உலக நாடுகள் அனைத்தும் தனித் தீவுகளாக மாறும் சூழல் உருவாகியுள்ளது. அதன்பிறகு, கொரோனா பாதிப்பு குறைந்த சூழலில் வெளிநாட்டு பயணங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

america,corona,mandatory,vaccination, ,அமெரிக்கா, கட்டாயம், கொரோனா, தடுப்பூசி

இதையடுத்து, கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை அமெரிக்க அரசு கட்டாயமாக்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் பொது சுகாதார அவசரநிலை வரும் 11ம் தேதியுடன் முடிவடைவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனாவால் ஏற்படும் இறப்புகள் 95 சதவீதம் குறைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் 91 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில்லை எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கொரோனா தடுப்பூசி போடுவது கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனை நீக்கப்பட்டதால், இந்த ஆண்டு அமெரிக்கா வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|