Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் பணி நியமனம் .. மா.சுப்ரமணியன்

அரசு மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் பணி நியமனம் .. மா.சுப்ரமணியன்

By: vaithegi Sat, 08 Apr 2023 1:05:13 PM

அரசு மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் பணி நியமனம்  ..  மா.சுப்ரமணியன்

சென்னை: தமிழக அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கைகள் எழுந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் 1,021 மருத்துவர்கள் விரைவில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவிப்பு ...

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவலுக்கு மத்தியில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ளது. இதனை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. இது குறித்து பேசிய விரைவில் மருத்துவர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

m. subramanian,government hospital , மா.சுப்ரமணியன் ,அரசு மருத்துவமனை

இதனை அடுத்து மொத்தமுள்ள 1,021 மருத்துவர் பணியிடங்களுக்கு 25,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இவர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு விரைவில் மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

மேலும் மருத்துவர்களுக்கான தேர்வு ஏப்ரல் 26-ம் தேதி அன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல மருந்தாளுநர்கள் பணியிடங்களுக்கான தேர்வும் நடத்தப்படவுள்ளது.

Tags :