Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக செலுத்தப்பட்ட தடுப்பூசியால் 2021ம் ஆண்டில் மட்டும் 42 லட்சம் இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளன

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக செலுத்தப்பட்ட தடுப்பூசியால் 2021ம் ஆண்டில் மட்டும் 42 லட்சம் இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளன

By: vaithegi Sat, 25 June 2022 12:48:34 PM

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக செலுத்தப்பட்ட தடுப்பூசியால் 2021ம் ஆண்டில் மட்டும் 42 லட்சம் இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளன

இந்தியா: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை ஒழிக்கும் முயற்சியாக கோவாக்சின், கோவிஷீல்டு போன்ற கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2021 ஜனவரி மாதம் முதல் இந்த தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்ததது.

முதல் கட்டமாக இந்த தடுப்பூசி 40 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும் செலுத்தப்பட்டு வந்தது. அதன் பின் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் விளைவாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

இந்த தடுப்பூசியானது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ் தாக்கத்தின் வீரியத்தை வெகுவாக குறைகிறது. தடுப்பூசி நல்ல பலனை அளித்ததால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது

india,vaccine,corona ,இந்தியா, தடுப்பூசி,கொரோனா

மத்திய மாநில அரசுகள் தடுப்பூசிகள் செலுத்த முகாம்களை ஏற்பாடு செய்து அதன் மூலம் மக்களுக்கு விரைவாக தடுப்பூசிகளை செலுத்தியது. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே பேருந்து மாற்று ரயில் பயணங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதனால் மக்களும் தடுப்பூசியின் அவசியத்தை உணர்ந்தனர்.

இதனால் கடந்த 2021ம் ஆண்டின் இறுதியில் பரவிய கொரோனா மூன்றாம் அலை பெரிதாக பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை அதற்கு காரணம் கொரோனா தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது.

2021ம் ஆண்டில் மட்டும் கொரோனா தடுப்பூசியால் 42 லட்சம் பேரின் மரணம் தடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா இறப்புகள் தொடர்பாக, தி லான்செட் மருத்துவ இதழ் நடத்திய ஆய்வில் முடிவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், 3.14 கோடி கொரோனா மரணங்களில் 1.98 கோடி இறப்புகள் தடுப்பூசி மூலம் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்

Tags :
|