Advertisement

நாளை 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள்

By: vaithegi Sat, 24 Sept 2022 11:55:40 AM

நாளை 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள்

சென்னை: தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கொண்டு வருகின்றன. 3 நாட்கள் இருக்கும் இந்த காய்ச்சலானது பருவநிலை மாற்றத்தால் மட்டுமே ஏற்படுகிறது என்றாலும் இக்காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் காய்ச்சல் ஏற்படுபவர்கள் 3 நாட்கள், 4 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது. எந்தெந்த பகுதியில் 3 பேருக்கு அதிகமான நபர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதோ அந்த இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று முதல் நடத்தப்பட்டு வருகிறது.

ma. subramanian,vaccination camps ,மா. சுப்பிரமணியன் , தடுப்பூசி முகாம்கள்

இந்த மாதம் 30-ந் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசிகள் இலவசம் என்ற மத்திய அரசின் அறிவிப்பின்படி தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே வருகிற 25-ந்தேதி 50 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

மேலும் தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார சுகாதார நிலையங்கள் என 1,133 மருத்துவமையங்களில் வருகிற புதன்கிழமை தடுப்பூசி போடும் பணி நடைபெறும். 14 முதல் 17 வயது வரையிலான மாணவ, மாணவிகளுக்கு வருகிற 4-ந் தேதி பள்ளிகளில் சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

Tags :