Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விடுபட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி திட்டம்

விடுபட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி திட்டம்

By: Nagaraj Tue, 08 Aug 2023 8:39:36 PM

விடுபட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி திட்டம்

தஞ்சாவூர்: தஞ்சை அருகே மேலவஸ்தாசாவடியில் தீவிர இந்திர தனுஷ் விடுபட்ட குழந்தைகளுக்கான மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான தடுப்பூசி திட்டம் நடந்தது.

தஞ்சாவூர் சுகாதார மாவட்டம் வல்லம் வட்டாரம் பிள்ளையார்பட்டி துணை சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மேல வஸ்தாசாவடி அங்கன்வாடியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தரவின் படி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் கலைவாணி தஞ்சாவூர் மாவட்டத்தில் தீவிர இந்திர தனுஷ் விடுபட்ட குழந்தைகளுக்கான மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான தடுப்பூசி திட்டத்தை தொடக்கி வைத்தார்.

anganwadi,vaccination scheme,mela vasta booth,camp ,அங்கன்வாடி, தடுப்பூசி திட்டம், மேல வஸ்தா சாவடி, முகாம்

இந்தத் திட்டமானது 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் விடுபட்ட தவணைகள் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவும், அதேபோல் கர்ப்பிணி தாய்மார்களும் தடுப்பூசித் தவணையை போடாமல் விட்டிருந்தால் மீண்டும் ஒரு வாய்ப்பாக கடந்த 7ம் தேதி முதல் வரும் 12தேதி வரையும், வரும் செப்டம்பர் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரையும், அக்டோபர் 9ம் தேதி முதல் 14ம் தேதி வரையும் தஞ்சாவூர் மாவட்டத்தில் தீவிர இந்திர தனுஷ் தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி தவணையை செலுத்திக்கொள்ளலாம்.

அதன்படி தஞ்சை அருகே மேல வஸ்தாசாவடியில் நடந்த தடுப்பூசி முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மு அகிலன் ஏற்பாட்டில் மாவட்ட தாய் சேய் நல அலுவலர் புவனேஸ்வரி, சமுதாய சுகாதார செவிலியர் ரேணுகா, கிராம சுகாதார செவிலியர் வளர்மதி , மேலவஸ்தா சாவடி அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள், தாய்மார்கள் கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டனர்.

Tags :