Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவை கட்டுப்படுத்த சீனாவில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம்

கொரோனாவை கட்டுப்படுத்த சீனாவில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம்

By: vaithegi Thu, 15 Dec 2022 3:48:50 PM

கொரோனாவை கட்டுப்படுத்த சீனாவில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம்

சீனா: தடுப்பூசி போடும் தீவிரம் .... சீனாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா மீண்டும் வேகமாக பரவி கொண்டு வருகிறது. தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. சீனாவை சேர்ந்த 93 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி செலுத்தியும் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதையடுத்து பல்வேறு நகரங்களில் மீண்டும் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து நாடு முழுவதும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டங்களால் அரசுக்கு நெருக்கடியும் ஏற்பட்டது. பொதுமக்கள் போராட்டம் எதிரொலியாக சீனாவில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன.

vaccination,china ,தடுப்பூசி , சீனா

கொரோனா தடுப்பு மையங்களும் மூடப்பட்டன. தற்போது பரிசோதனைகள் குறைக்கப்பட்டதால் தினசரி பாதிப்புகளும் குறைந்து உள்ளது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த சீனாவில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்து உள்ளது.

இதனை அடுத்து சீனாவில் சமீப நாட்களாக தடுப்பூசிகள் போடுவது உயர்ந்து கொண்டே வருகிறது. சமீபத்திய அதிகாரப்பூர்வ தரவின் படி, கடந்த செவ்வாயன்று 14 லட்சத்திற்கும் அதிகமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுயுள்ளது. தொடர்ந்து நாளைக்கு லட்சக்கனக்கானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு கொண்டு வருகிறது.

Tags :