Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புற்றுநோய் சிகிச்சைக்கு தடுப்பூசி கண்டறியப்பட்டுள்ளன

புற்றுநோய் சிகிச்சைக்கு தடுப்பூசி கண்டறியப்பட்டுள்ளன

By: vaithegi Tue, 27 June 2023 3:27:10 PM

புற்றுநோய் சிகிச்சைக்கு தடுப்பூசி கண்டறியப்பட்டுள்ளன

இந்தியா: புற்றுநோய் தடுப்பூசி ஆய்வில் விஞ்ஞானிகள் முன்னேற்றம் ... விஞ்ஞானிகளின் பலவருட புற்றுநோய் சிகிச்சைக்கான ஆராய்ச்சிக்கு பிறகு, ஆராய்ச்சியில் புதிய திருப்புமுனையை அடைந்து உள்ளதாக கூறுகின்றனர். இதையடுத்து இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் புற்றுநோய்க்கான தடுப்பூசிகள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் வெளிவரும் என விஞ்ஞானிகள் பலர் கூறுகின்றனர்.உலகில் கொடிய நோயாக கருதப்படும் இந்த புற்றுநோய் ஒருவருக்கு வந்தால் அவரின் உடலில் உள்ள நோய்எதிர்ப்பு மண்டலத்தின் அனைத்து செல்களையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து பிறகு உயிரையே எடுத்துவிடும் இந்த புற்றுநோய்க்கு விஞ்ஞானிகள் பல ஆண்டுகள் ஆய்வுக்கு பின் இதில் முன்னேற்றம் அடைந்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு பற்றி புற்றுநோய் நிறுவன மையத்த்தில் புற்றுநோய் சிகிச்சை தடுப்பூசிகள் ஆய்வில் பணிபுரியும் பிரபல டாக்டர் ஜேம்ஸ் குல்லி, கூறும்போது தடுப்பூசிகள், புற்றுநோயை தடுக்கும் ஆரம்பகால தடுப்பூசி போல் அல்லாமல், புற்றுநோய் கட்டிகளை சுருக்கவும் மீண்டும் திரும்ப வராமல் பாதுகாக்கவும் உதவும் வகையில் தடுப்பூசிகள் இருக்கும் என அவர் கூறினார்.

vaccination,cancer treatment ,தடுப்பூசி ,புற்றுநோய் சிகிச்சை

மேலும் மார்பகம் மற்றும் நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை சிகிச்சைகள் விரைவில் மேற்கொள்ளப்படும், தற்போது இந்த ஆண்டு கொடிய தோல் புற்றுநோய் மெலனோமா மற்றும் கணைய புற்றுநோய்க்கான சிகிச்சைகள் பலனளித்து உள்ளதாக டாக்டர் ஜேம்ஸ் கூறினார். மேலும் இதற்கு முந்தைய பல சோதனைகள் தோல்வியில் முடிந்தாலும், அதிலிருந்து பல மாறுதல்களுடன் அடுத்தடுத்த ஆய்வுகளில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் ஜேம்ஸ் தெரிவித்தார்.

ஆனால் தற்போது அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள UW மருத்துவ ஆய்வகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு வரும் தடுப்பூசிகள் ஒரு நோயாளிக்கு மட்டுமல்லாமல், பல நோயாளிகளின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கும் தகுந்தாற்போல் வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இதனை அடுத்து இந்த ஆராய்ச்சிகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், அடுத்தாண்டுக்குள் இந்த ஆராய்ச்சியின் பரிசோதனை முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :