Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனமழையால் நிரம்பும் வைகை அணை: வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது

கனமழையால் நிரம்பும் வைகை அணை: வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது

By: Nagaraj Fri, 10 Nov 2023 4:58:10 PM

கனமழையால் நிரம்பும் வைகை அணை: வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது

மதுரை: வெள்ள அபாய எச்சரிக்கை... தேனியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வைகை அணை வேகமாக நிரம்பியது. அணைக்கு வினாடிக்கு 2596 கனஅடி நீர் வரத்து உள்ள நிலையில் மதுரை, திண்டுக்கல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் அணையின் மதகுகளை திறந்து வைத்து, ஓடும் நீரில் மலர் தூவி மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் மதுரை, தேனி மாவட்ட ஆட்சியர்களும் கலந்து கொண்டனர்.

வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். முதல் 45 நாட்களுக்கு வினாடிக்கு 90,000 கனஅடி வீதம், அடுத்த 75 நாட்களுக்கு நீர் இருப்புக்கு ஏற்ப மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.

farmers happy,irrigation water,vaigai dam, ,பாசன நீர் திறப்பு, விவசாயிகள் மகிழ்ச்சி, வைகை அணை

இந்நிலையில், வைகை அணை கட்டப்பட்டு 64 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது அணை 33வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இதனால் அணையின் பாதுகாப்பு கருதி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்படுவதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும், யாரும் வைகை ஆற்றுக்குள் செல்லவோ, கடக்கவோ வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tags :