Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தவறி விழுந்து காயமடைந்து வைகோவின் கார் ஓட்டுநர் உயிரிழப்பு

தவறி விழுந்து காயமடைந்து வைகோவின் கார் ஓட்டுநர் உயிரிழப்பு

By: Nagaraj Fri, 13 Oct 2023 06:44:06 AM

தவறி விழுந்து காயமடைந்து வைகோவின் கார் ஓட்டுநர் உயிரிழப்பு

திருநெல்வேலி: வைகோவின் கார் ஓட்டுநர் திருநெல்வேலி அருகே உயிரிழந்தார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இவரின் கார் ஓட்டுநர் சின்னத்துரை (59). இவர் திருநெல்வேலி, குலவணிகர்புரத்தைச் சேர்ந்தவர். இவர் இன்று மாலையில் இட்டாரியில் உள்ள தனது நண்பரின் தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

vaiko,car driver,injured,died,investigation ,வைகோ, கார் டிரைவர், காயம், இறந்தார், விசாரணை

அப்போது அவர் தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அவரை அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்தாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் காவல் துறை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
|
|