Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வள்ளலார் 200ம் ஆண்டு நிறைவை ஒட்டி தஞ்சை மாபெரும் பேச்சுப்போட்டி

வள்ளலார் 200ம் ஆண்டு நிறைவை ஒட்டி தஞ்சை மாபெரும் பேச்சுப்போட்டி

By: Nagaraj Wed, 30 Aug 2023 1:36:56 PM

வள்ளலார் 200ம் ஆண்டு நிறைவை ஒட்டி தஞ்சை மாபெரும் பேச்சுப்போட்டி

தஞ்சாவூர்: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வள்ளலார் 200ம் ஆண்டு நிறைவையொட்டி, மாபெரும் தமிழ்ப் பேச்சுப் போட்டி வரும் செப்டம்பர் 27ம் தேதி நடக்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வள்ளலால் மக்களுக்கு கடவுள் ஒருவரே, அவர் ஜோதி வடிவானவர், ஜீவகாருண்யம், பிற உயிர்களின் பசி போக்குதல், சாதி சமய வேறுபாடுகள் அற்ற சமுதாயத்தை உருவாக்குவது போன்ற கொள்கைகளை பரப்பி வந்தார்.

தனது யோக, தியான சாதனைகளால் பல சித்திகள் கைவறப்பற்ற வள்ளலார் அவற்றை ஆன்மீக மற்றும் பிற மக்களின் துயர் நீக்க பயன்படுத்தி உள்ளார். இத்தகைய பெருமையுடைய இராமலிங்க அடிகளாரின் 200வது ஆண்டு விழாவை கடந்த 2022ம் ஆண்டு செப். 12ம் தேதி மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகளைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும், சன்மார்க்க மன்றமும் தொடங்கி வைத்தன.

தற்போது வள்ளலார் 200 நிறைவையொட்டி, சன்மார்க்கம் தொடர்பான பல்வேறு தலைப்புகளை மையமாக வைத்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்லூரி, பல்கலைக்கழக நிலையில் உள்ள மாணவர்களுக்கு மாநில அளவிலான பேச்சுப் போட்டிகள் வரும் செப்டம்பர் 27ம் தேதி நடைபெறவுள்ளன.

speech competition,great,thanjavur,tamil university,arrangements ,பேச்சுப்போட்டி, மாபெரும், தஞ்சை, தமிழ்ப் பல்கலைக்கழகம், ஏற்பாடுகள்

இதற்கான அறிவிப்பு வெளியீட்டு நிகழ்ச்சி தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து துணைவேந்தர் வி. திருவள்ளுவன் போட்டிக்கான அறிவிக்கையை வெளியிட, சன்மார்க்க மன்றத் தலைவரும், வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத் தலைவருமான அருள் நாகலிங்கம் பெற்றுக் கொண்டார்.

இப்பேச்சுப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ. 30 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 25 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 10 ஆயிரம் வழங்கப்பட உள்ளது என்றும், மேலும் சிறந்த 10 பேச்சாளர்களுக்குத் தலா ரூ. ஆயிரம் வழங்கப்பட உள்ளது எனவும் துணைவேந்தரும், சன்மார்க்க மன்றத் தலைவரும் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பதிவாளர் (பொ) சி. தியாகராஜன், கலைப்புல முதன்மையர் பெ. இளையாப்பிள்ளை, மக்கள் தொடர்பு அலுவலர் (பொ) இரா.சு. முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முழுவதிலுமிருந்து ஏறத்தாழ 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவுள்ள இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் இரா. குறிஞ்சிவேந்தன், சன்மார்க்க மன்றப் பொறுப்பாளர்கள் மஞ்சுளா, முனைவர் சங்கரராமன் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

Tags :
|