Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வல்லம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அகிலன் தலைமையில் மக்களை தேடி மருத்துவ முகாம்

வல்லம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அகிலன் தலைமையில் மக்களை தேடி மருத்துவ முகாம்

By: Nagaraj Fri, 05 May 2023 8:44:11 PM

வல்லம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அகிலன் தலைமையில் மக்களை தேடி மருத்துவ முகாம்

தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லம், மருங்குளம், காசநாடு புதூர், நாகத்தி ஆலக்குடி, தென்னங்குடி ஆகிய ஆறு நிலையங்களை சார்ந்த 24 துணை சுகாதார நிலையங்களில் எளிதில் மருத்துவ சிகிச்சை கிடைக்காத இடங்களை கண்டறிந்து மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் படி மாவட்ட துணை இயக்குனர் சுகாதார பணிகள் டாக்டர் கலைவாணி வழிகாட்டுதலின் பேரில் வல்லம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அகிலன் தலைமையில் இந்த மக்களை தேடி மருத்துவ முகாம் நடந்தது.

இதன்படி வல்லம், மருங்குளம், காசநாடு புதூர் ,நாகத்தி, ஆலக்குடி, தென்னங்குடி ஆகிய ஆறு நிலையங்களை சார்ந்த 24 துணை சுகாதார நிலையங்களில் எளிதில் மருத்துவ சிகிச்சை கிடைக்காத இடங்களை கண்டறிந்து மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு மக்களை தேடி மருத்துவ முகாம் நடந்தது.

medical camp,volunteers,peoples representatives,anganwadi workers,medicine vault ,மருத்துவ முகாம், தன்னார்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள், அங்கன்வாடி பணியாளர்கள்,  மருந்து பெட்டகம்

இதில் 18 வயதிற்கு மேல் உள்ள 1680 பேருக்கு வெறும் வயிற்றில் சர்க்கரை பரிசோதனை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த மருத்துவ முகாம் வாயிலாக புதிதாக 169 பேருக்கு ரத்த அழுத்தம், 139 பேருக்கு சர்க்கரை வியாதி, 54 பேருக்கு சர்க்கரை மற்றும் ரத்தக் கொதிப்பு இரண்டும் உள்ளது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சுகாதார தன்னார்வலர்களைக் கொண்டு வீடு தேடி மருந்து பெட்டகங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டது. முகாமில் வல்லம் வட்டாரத்தைச் சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் சுகாதார ஆய்வாளர்கள் மக்களை தேடி மருத்துவ தன்னார்வலர்கள் மக்கள் பிரதிநிதிகள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்

Tags :