Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வந்தே பாரத் ரயிலுக்கு நேரம் சரியில்லை போலும்... மீண்டும் விபத்தில் சிக்கியது

வந்தே பாரத் ரயிலுக்கு நேரம் சரியில்லை போலும்... மீண்டும் விபத்தில் சிக்கியது

By: Nagaraj Sat, 19 Nov 2022 9:53:30 PM

வந்தே பாரத் ரயிலுக்கு நேரம் சரியில்லை போலும்... மீண்டும் விபத்தில் சிக்கியது

சென்னை: ரயிலுக்கு நேரம் சரியில்லை போலும்... மைசூரில் இருந்து சென்னை நோக்கி வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் அரக்கோணம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென ரயிலின் மீது ஒரு கன்றுக்குட்டி மோதியது. இந்த விபத்தில் கன்று குட்டி உயிரிழக்கவே அதை ஊழியர்கள் அப்புறப்படுத்திய பிறகு மீண்டும் ரயில் அங்கிருந்து கிளம்பியது.

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அடுத்த வருடத்திற்குள் 75 வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி ஒவ்வொரு பகுதிகளிலும் வந்தே பாரத் ரயில் சேவையானது அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 6-ம் தேதி குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவுக்கு சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது 4 நாடுகள் மோதியதில் மாடுகள் பலியானது. இந்த விபத்தில் ரயிலின் முன்பக்கத்தில் லேசான சேதம் ஏற்பட்டது. இதே ரயிலில் கடந்த மாதம் 7-ம் தேதி மீண்டும் ஒரு பசு மாடு மோதியது.

netizens,train,mumbai,cows hit,chennai ,நெட்டிசன்கள், ரயில், மும்பை, மாடுகள் மோதியது, சென்னை

இந்த விபத்தில் ரயில் முன் பக்கம் சேதம் அடையவே மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 8-ம் தேதி டெல்லியில் இருந்து வாரணாசி பகுதிக்கு வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ரயிலின் சக்கரம் ஜாம் ஆனதால் 5 மணி நேரம் போக்குவரத்து தாமதமாகி பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.


கடந்த 29-ஆம் தேதி மும்பையில் இருந்து காந்திநகர் நோக்கி வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலின் மீது மாடுகள் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு மைசூரில் இருந்து சென்னை நோக்கி வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது.


இந்த ரயில் அரக்கோணம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென ரயிலின் மீது ஒரு கன்றுக்குட்டி மோதியது. இந்த விபத்தில் கன்று குட்டி உயிரிழக்கவே அதை ஊழியர்கள் அப்புறப்படுத்திய பிறகு மீண்டும் ரயில் அங்கிருந்து கிளம்பியது. இந்த ரயில் சேவை தொடங்கியதில் இருந்து 4-வது முறையாக விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ரயிலுக்கு நேரம் சரியில்லை போலும் என்று நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Tags :
|
|