Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கே.என். லட்சுமணன் மறைவையொட்டி பல்வேறு தலைவர்கள் இரங்கல்

கே.என். லட்சுமணன் மறைவையொட்டி பல்வேறு தலைவர்கள் இரங்கல்

By: Monisha Tue, 02 June 2020 10:08:17 AM

கே.என். லட்சுமணன் மறைவையொட்டி பல்வேறு தலைவர்கள் இரங்கல்

தமிழக பா.ஜ.க. தலைவர் கே.என். லட்சுமணன் (வயது 92), உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவையொட்டி பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- அரசியல், ஆன்மீகம், கல்வி என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அமரர் கே.என். லட்சுமணன் அவர்களின் இழப்பு மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பாகும். அனைவரிடமும் அன்பு பாராட்டும் பெருமை மிக்க தலைவர் அமரர் கே.என்.லட்சுமணன் அவர்களை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தொண்டர்களுக்கும் தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என கூறியுள்ளார்.

former tamilnadu bjp leader,kn. lakshmanan,passed away,l. murugan,mk stalin,tamilisai soundararajan ,முன்னாள் தமிழக பா.ஜ.க. தலைவர்,கே.என். லட்சுமணன்,காலமானார்,எல்.முருகன்,மு.க.ஸ்டாலின்,தமிழிசை சவுந்தரராஜன்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- தமிழக பா.ஜ.க.,வின் முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் அவர்கள் தனது சேலம் செவ்வாய்பேட்டை இல்லத்தில் மறைவெய்திய செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், கட்சிப் பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு தி.மு.கழகத்தின் சார்பில் ஆறுதலைத் தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

former tamilnadu bjp leader,kn. lakshmanan,passed away,l. murugan,mk stalin,tamilisai soundararajan ,முன்னாள் தமிழக பா.ஜ.க. தலைவர்,கே.என். லட்சுமணன்,காலமானார்,எல்.முருகன்,மு.க.ஸ்டாலின்,தமிழிசை சவுந்தரராஜன்

தெலுங்கானா ஆளுநரும், தமிழக பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘கொள்கைப் பிடிப்போடு எளிய வாழ்க்கை வாழ்ந்து பலருக்கும் வழிகாட்டியாக திகழ்ந்தவர் கே.என்.லட்சுமணன்’ என கூறியுள்ளார்.

Tags :