Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இரட்டிப்புப் பணிகள் காரணமாக பல்வேறு ரயில் சேவைகள் மாற்றம்

இரட்டிப்புப் பணிகள் காரணமாக பல்வேறு ரயில் சேவைகள் மாற்றம்

By: vaithegi Tue, 14 Feb 2023 7:31:35 PM

இரட்டிப்புப் பணிகள் காரணமாக பல்வேறு ரயில் சேவைகள் மாற்றம்

சென்னை: நாட்டில் பொது போக்குவரத்துகளில் ஒன்றான ரயில் போக்குவரத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மேற்கு ரயில்வே ஆனது ரத்லாம் கோட்டத்தின் கர்ச்சா – பர்லாய் நிலையங்களுக்கு இடையே உள்ள இரட்டிப்புப் பணிகள் காரணமாக மாற்றப்பட்டுள்ள விவரங்கள் இதோ

எனவே அதன்படி வருகிற 17-ம் தேதி கொச்சுவேலியில் இருந்து 11.10 மணிக்கு புறப்படும் கொச்சுவேலி – இந்தூர் ஜேஎன் வாராந்திர சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே போன்று இந்தூரிலிருந்து வருகிற 21-ம் தேதி 21.40 மணிக்கு புறப்படும் இந்தூர் – கொச்சுவேலி வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்ட்டுள்ளது.

train services,express ,ரயில் சேவைகள் ,எக்ஸ்பிரஸ்

மேலும் கொச்சுவேலியில் இருந்து வருகிற 18ம் தேதி காலை 06.35 மணிக்கு கொச்சுவேலி – இந்தூர் வாராந்திர அதிவிரைவு விரைவு ரயில் புறப்பட்டு, உஜ்ஜைன், ஃபதேஹாபாத் சந்திரவதி கஞ்ச், இந்தூர் ஆகியவை வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே போல் இந்தூரிலிருந்து வருகிற பிப்ரவரி 20 இந்தூர் – கொச்சுவேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் 16.45 மணிக்குப் புறப்பட்டு இந்தூர், ஃபதேஹாபாத் சந்திரவதிகஞ்ச், உஜ்ஜைன் போன்றவற்றின் வழியாக இயக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அஜ்மீரிலிருந்து அஜ்மீர் – ராமேஸ்வரம் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற பிப்ரவரி 18 அன்று 20.20 மணிக்குப் புறப்பட்டு ரத்லம், ஃபதேஹாபாத் சந்திரவதிகஞ்ச், உஜ்ஜைன் போன்றவற்றின் வழியாக இயக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :