Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாட்டி வதைத்தா அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது

வாட்டி வதைத்தா அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது

By: vaithegi Sun, 28 May 2023 11:03:26 AM

வாட்டி வதைத்தா அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது

சென்னை: அக்னி நட்சத்திர வெயில் இன்றுடன் முடிவடைய இருக்கும் நிலையில் தமிழகத்தில் இன்று சென்னை உள்பட பல நகரங்களில் மிதமான மழை முதல் கனமழை வரையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வந்தது என்பது இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர் என்பதும் தெரிந்ததே.

agni nakshatra,public , அக்னி நட்சத்திரம் ,பொதுமக்கள்

இந்நிலையில் இன்றுடன் அக்னி நட்சத்திர வெயில் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது

அதிலும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :