Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க கோரி வரும் 10-ந்தேதி காய்கறி, பூ மார்க்கெட்டுகள் மூடல்

கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க கோரி வரும் 10-ந்தேதி காய்கறி, பூ மார்க்கெட்டுகள் மூடல்

By: Monisha Tue, 04 Aug 2020 2:31:48 PM

கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க கோரி வரும் 10-ந்தேதி காய்கறி, பூ மார்க்கெட்டுகள் மூடல்

சென்னையில் முதன் முதலில் கோயம்பேடு மார்க்கெட் வழியே கொரோனா பரவல் ஏற்பட்டது. தொற்று பரவலை தடுக்கும் வகையில் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. இதனால், சென்னையை அடுத்த திருமழிசையில் காய்கறி சந்தை அமைக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை புரசைவாக்கத்தில் கோயம்பேடு மார்க்கெட், மாவட்டங்களில் மூடப்பட்டுள்ள மார்க்கெட்டுகளை திறக்க அனுமதிக்க கோரி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வரும் 10-ந்தேதி தமிழகம் முழுவதும் உள்ள காய்கறி, பூ மார்க்கெட்டுகளை மூட வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

koyambedu,market,vegetable,flower,merchants ,கோயம்பேடு,மார்க்கெட்,காய்கறி,பூ,வியாபாரிகள்

அதன்படி கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி வரும் 10-ந்தேதி தமிழகம் முழுவதும் உள்ள காய்கறி, பூ மார்க்கெட்டுகள் மூடப்படுகிறது. திருமழிசையில் உள்ள தற்காலிக காய்கறி சந்தையில் போதிய வசதிகள் இல்லை என வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வரும் திங்கட்கிழமை அன்று அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

Tags :
|
|