Advertisement

கனமழை காரணமாக காய்கறி விலை 2 மடங்காக உயர்வு

By: vaithegi Tue, 13 Sept 2022 12:43:31 PM

கனமழை காரணமாக காய்கறி விலை 2 மடங்காக உயர்வு

போரூர்: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து காய்கறி விற்பனைக்கு வருகிறது.

இதனையடுத்து கடந்த மாதம் வரை தினசரி 480-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து குவிந்தது. இதன் காரணமாக பெரும்பாலான பச்சை காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்தது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் பரவலாக பெய்த கனமழை காரணமாக காய்கறி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

vegetable,heavy rain ,காய்கறி ,கனமழை

எனவே இதனால் கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறி வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. இன்று 360 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளன. வரத்து குறைவு காரணமாக கேரட், பீன்ஸ், அவரைக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை 2 மடங்காக அதிகரித்து உள்ளது.

மேலும் அதேபோன்று கத்தரிக்காய், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் அதிகரித்து உள்ளது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் கேரட் மற்றும் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.100-க்கும், அவரைக்காய் மற்றும் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.80-க்கும் விற்கப்படுகிறது.

Tags :