Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரி முழுவதும் அடுத்த வாரம் முதல் வாகன வேக கட்டுப்பாடு அமல்

புதுச்சேரி முழுவதும் அடுத்த வாரம் முதல் வாகன வேக கட்டுப்பாடு அமல்

By: vaithegi Sun, 03 Sept 2023 6:56:33 PM

புதுச்சேரி முழுவதும் அடுத்த வாரம் முதல் வாகன வேக கட்டுப்பாடு அமல்

புதுச்சேரி : புதுச்சேரி பொதுநிர்வாகதுறையின் மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் பிரிவு 112ன் கீழ் அதிகபட்ச வேக வரம்புகளை நிர்ணயிக்க உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து அதன் படி அடுத்த வாரம் முதல், புதுச்சேரி முழுவதும் உள்ள அனைத்து சாலை களில் வேக கட்டுப்பாடு கொண்டு வரப்படுகிறது. இதற்காக ஸ்பீடு கன் சாதனம் வேகத்தை கண்டறிய வந்து உள்ளது.

எனவே அதன்படி குபேர் அவென்யூ (கடற்கரை சாலை பழைய வடிசாராய சாலையில் இருந்து பார்க் விருந்தினர் மாளிகை சந்திப்பு வரை) 20 கி.மீ வேகத்திலும், சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, சுப்பையா சாலை, கடற்கரைச்சாலை மற்றும் அண்ணாசலை (வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு) ஆகிய பகுதிகளில் 30 கி.மீ வேகத்திலும், கடலூர் சாலை வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கத்தில் இருந்து அரியாங்குப்பம் பாலம் வரை 30 கி.மீ வேகத்திலும், கடலூர் சாலை அரியாங்குப்பம் பாலத்திலிருந்து புதுச்சேரி பிராந்தியம் முள்ளோடை எல்லை வரை 50 கி.மீ வேகத்தி லும், கடலூர் சாலையில் அரியாங்குப்பம் பாலத் தில் இருந்து புதுச்சேரி பிராந்தியம் முள்ளோடைஎல்லை வரை (கல்வி நிறு வனங்கள். குடியிருப்பு பகுதி, தொழில்துறை பகுதி, சந்தை இடங்கள் மற்றும் மருத்துவமனை கள்) அருகில் 30 கி.மீ வேகத்திலும்,

vehicle speed ​​control,puducherry ,வாகன வேக கட்டுப்பாடு,புதுச்சேரி

மேலும் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கடற்கரைச்சாலை முதல் வில்லியனூரி ஆரியபாளையம் பாலம் வரை 30 கி.மீ வேகத்திலும், விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆரியபாளையம் பாலத்தில் இருந்து புதுச்சேரி எல்லை மதகடிப்பட்டு வரை 50 கி.மீ வேகத்திலும், வில்லியனூர் ஆரிய பாளையம் பாலத்தில் இருந்து புதுச்சேரி எல்லை மதகடிப்பட்டு (கல்வி நிறுவனங்கள், குடியிருப்பு பகுதி, தொழில்துறை பகுதி, சந்தை இடங்கள் மற்றும் மருத்துவமனை) அருகில் 30 கி.மீ வேகத்திலும், காமராஜர் சாலை (முழுவதும்) முதல் கோரிமேடு எல்லை வரை 30 கி.மீவேகத்திலும், வழுதாவூர்சாலை ராஜீவ் காந்தி சதுக்கத்திலிருந்து குரு மாம்பேட் பாண்லே வரை 30 கி.மீ வேகத்தி லும், எம்.ஜி.ரோடு, சுப் பையா சாலை சந்திப்பிலிருந்து முத்தியால் பேட்டை மார்க்கெட் வரை 30 கி.மீ வேகத்திலும்,

இதனை அடுத்து மரப்பாலம் சந்திப் பில் இருந்து முத்தியால் பேட்டை மார்க்கெட் வரை 30 கி.மீ வேகத்திலும் முத்தியால்பேட்டை . மார்க்கெட் முதல் புதுச்சேரி பிராந்தியம் களக செட்டிகுளம் எல்லை வரை (திறந்த சாலை) 50 கி.மீ வேகத்திலும், முத்தியால்பேட்டை மார்க் கெட்டிலிருந்து புதுச்சேரி பிராத்தியம் களகசெட்டிகுளம் எல்லை வரை (கல்வி நிறுவனம், குடியிருப்பு பகுதி தொழில்துறை பகுதி, சந்தை, மருத்துவமனைகள்) 30 கி.மீ வேகத்திலும் அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டும் என உத்தரவு வெளியானது. எனவே விதிகளை மீறி வேக மாக செல்லும் வாகனங் களை ஸ்பீடு கன் மூலம் வேகத்தை கண்டறிந்து அபாரதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரித்தனர்.

Tags :