Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாகனங்களுக்கு கட்டுப்பாடு தேவை: தேசிய நுரையீரல் நோய் தடுப்பு மாநாட்டில் வலியுறுத்தல்

வாகனங்களுக்கு கட்டுப்பாடு தேவை: தேசிய நுரையீரல் நோய் தடுப்பு மாநாட்டில் வலியுறுத்தல்

By: Nagaraj Tue, 10 Oct 2023 07:04:59 AM

வாகனங்களுக்கு கட்டுப்பாடு தேவை: தேசிய நுரையீரல் நோய் தடுப்பு மாநாட்டில் வலியுறுத்தல்

டெல்லி: மாசுபாட்டைக் குறைக்க வாகனங்களுக்கு கட்டுப்பாடு தேவை என்று தேசிய நுரையீரல் நோய் தடுப்பு மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற நுரையீரல் நோய் தடுப்பு மாநாட்டில் உலகப் புகழ்பெற்ற மருத்துவர் ராஜேஷ் சாவ்லா காற்று மாசுபாட்டை குறைக்க வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தேசிய நுரையீரல் நோய் தடுப்பு மாநாடு நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் நுரையீரல் நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜேஷ் சாவ்லா பங்கேற்று உரையாற்றினார். அப்பொழுது அவர் கூறியதாவது: இந்தியாவில் நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது.

air pollution,people,control,vehicles,children,vulnerability ,காற்று மாசுப்பாடு, மக்கள், கட்டுப்பாடு, வாகனங்கள், குழந்தைகள், பாதிப்பு

குறிப்பாக போக்குவரத்தினால் ஏற்படும் காற்று மாசு பல மடங்கு உயர்ந்துகொண்டே வருகிறது. குழந்தைகள் கூட தற்போது காற்று மாசு காரணமாக பாதிக்கப்படுகின்றனர்.

தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகைகளும் காற்று மாசை மேம்படுத்தி உள்ளன. இப்படி காற்று விஷமாக மாற்றப்படுவதால் மனிதர்கள், பல்வேறு வகையான உயிரினங்கள் மற்றும் இயற்கையும் சேர்ந்து பாதிக்கப்படுகிறது. இதனால் பருவநிலை மாற்றம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இந்திய அரசு காற்று மாசைக் கட்டுப்படுத்த ஒரு குடும்பத்தினர் எத்தனை வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்று கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும். மேலும் பொது போக்குவரத்தை பயன்படுத்த மக்களை தூண்ட வேண்டும். அது மட்டும் அல்லாது வாகன பயன்பாட்டை குறைக்க நேர கட்டுப்பாட்டை அமல்படுத்த வேண்டும். இவை சிறிதளவு காற்று மாசைக் குறைக்கும் என்று தெரிவித்தார்.

Tags :
|