Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லியில் அக்டோபர் 25 முதல் இந்த சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்பட மாட்டாது

டெல்லியில் அக்டோபர் 25 முதல் இந்த சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்பட மாட்டாது

By: vaithegi Sat, 01 Oct 2022 6:50:33 PM

டெல்லியில் அக்டோபர் 25 முதல் இந்த  சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்பட மாட்டாது

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை அடுத்து அதன் ஒரு பகுதியாக வாகன ஓட்டிகள் அனைவரும் PUC எனப்படும் மாசு கட்டுப்பாடு சான்றிதழை பெற வேண்டியது அவசியம் என டெல்லி அரசு வலியுறுத்தி வருகிறது.

பெட்ரோல், டீசல் மூலம் இயங்கக்கூடிய வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்சைடு ஆகிய காற்றை மாசுபடுத்தக்கூடிய வாயுக்களின் அளவை கண்காணித்து அதற்கான சான்றாக மாசு கட்டுப்பாடு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

petrol,diesel,delhi ,பெட்ரோல், டீசல்,டெல்லி


டெல்லி போக்குவரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் ஜூலை மாத நிலவரத்தின்படி, டெல்லியில் சுமார் 17 லட்சம் வாகனங்கள் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாமல் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாசு கட்டுப்பாடு சான்றிதழை கட்டாயமாக்குவது குறித்து கடந்த மார்ச் மாதம் டெல்லி மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் பெரும்பாலான மக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்ததாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து டெல்லியில் வாகன ஓட்டிகள் மாசு கட்டுப்பாடு சான்றிதழை பெற வேண்டியது தற்போது காட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

எனவே அதன்படி வரும் அக்டோபர் 25-ந்தேதி முதல் டெல்லியில் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பெறாமலோ, புதுப்பிக்காமலோ வாகனம் ஓட்டினால் அக்டோபர் 25 முதல் மோட்டார் வாகன சட்டத்தின்படி, ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags :
|
|