Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுடில்லியை உலுக்கும் கடும் பனிப்பொழிவால் வாகன போக்குவரத்து பாதிப்பு

புதுடில்லியை உலுக்கும் கடும் பனிப்பொழிவால் வாகன போக்குவரத்து பாதிப்பு

By: Nagaraj Sat, 07 Jan 2023 9:15:58 PM

புதுடில்லியை உலுக்கும் கடும் பனிப்பொழிவால் வாகன போக்குவரத்து பாதிப்பு

புதுடெல்லி: கடும் பனிப்பொழிவால் மக்கள் பாதிப்பு... புதுடெல்லி மற்றும் வட இந்தியா முழுவதும் கடும் பனிப்பொழிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


டெல்லியில் இந்த குளிர்காலத்தில் பனிமூட்டமான மற்றும் தெளிவற்ற வானிலை காணப்படுகிறது. டெல்லியில் கார், பைக் உள்ளிட்ட வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு மற்றும் பார்வைத் திறன் குறைவாக இருப்பதால், காலையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனங்கள் சாலைகளில் செல்கின்றன.

affect,new delhi,snowfall, ,பனிப்பொழிவு, பாதிப்பு, புதுடெல்லி, மக்கள், விமானங்கள்

டில்லியில், குளிர்காலம் துவங்கி உள்ளதால், பல இடங்களில் வெப்பநிலை குறைந்து வருகிறது. இதனால் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று பல விமானங்கள் தாமதமாக வந்தன. இதையடுத்து, டெல்லி விமான நிலையம் பயணிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது அனைத்து விமான சேவைகளும் சீராக இயங்கி வருகின்றன. இருப்பினும், சமீபத்திய விமானத் தகவல் மற்றும் அடுத்த இயக்கம் உள்ளிட்ட விவரங்களுக்கு பயணிகள் விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
|