Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழை மற்றும் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமாம்

இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழை மற்றும் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமாம்

By: vaithegi Mon, 16 Oct 2023 2:36:13 PM

இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழை மற்றும் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமாம்

சென்னை: தமிழகத்தில் பருவமழை காலம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அநேக மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று காலை பெய்த கனமழை காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய வானிலை நிலவரம் குறித்த அறிக்கையில் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல்நிலைவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் புதுச்சேரியின் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

heavy rains,holidays for schools and colleges ,கனமழை , பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்யும். கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்ய உள்ளது.

இதனை அடுத்து சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Tags :