Advertisement

மிக கனமழை..நீலகிரி, கோவை மாவட்ட மக்களே உஷார்..

By: Monisha Thu, 14 July 2022 8:08:51 PM

மிக கனமழை..நீலகிரி, கோவை மாவட்ட மக்களே உஷார்..

சென்னை: மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்றும் நாளையும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானமுதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

rain,celcius,beware,celcius. ,பருவமழை, வானிலை,வானம் ,செல்சியஸ்,

இன்றும் நாளையும் இலட்சத்தீவு பகுதி, கேரளா - கர்நாடகா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேற்கு திசையிலிருந்து பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தமிழக கடலோரப்பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags :
|
|