Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புயல் காரணமாக வெற்றிவேல் யாத்திரை ரத்து - தமிழக பா.ஜ.க. தலைவர்

புயல் காரணமாக வெற்றிவேல் யாத்திரை ரத்து - தமிழக பா.ஜ.க. தலைவர்

By: Monisha Tue, 24 Nov 2020 09:04:32 AM

புயல் காரணமாக வெற்றிவேல் யாத்திரை ரத்து - தமிழக பா.ஜ.க. தலைவர்

புயல் காரணமாக வெற்றிவேல் யாத்திரை ரத்து செய்யப்படுகிறது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.

தமிழக பா.ஜனதா சார்பில் கடந்த 6-ந்தேதி முதல் அடுத்த மாதம் 6-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டனர். ஆனால் இந்த யாத்திரைக்கு கொரோனாவை காரணம் காட்டி அரசு அனுமதி மறுத்துவிட்டது. இருப்பினும் தடையை மீறி திருத்தணியில் இருந்து கடந்த 6-ந்தேதி வேல் யாத்திரை தொடங்கியது.

தீபாவளி விடுமுறைக்கு பிறகு 17-ந்தேதி முதல் திருவண்ணாமலையில் இருந்து யாத்திரை தொடங்கப்பட்டது. மேலும், வேல் யாத்திரை அடுத்த மாதம் 7-ந்தேதி திருச்செந்தூரில் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

storm,victory pilgrimage,bjp,l murugan,cancellation ,புயல்,வெற்றிவேல் யாத்திரை,பா.ஜ.க,எல்.முருகன்,ரத்து

இந்நிலையில், புயலின் காரணமாக வெற்றிவேல் யாத்திரை ரத்து செய்யப்படுகிறது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் நடக்க இருந்த வெற்றிவேல் யாத்திரையானது புயலின் காரணமாக ரத்து செய்யப்படுகிறது. தமிழக பா.ஜ.க. தொண்டர்கள் அனைவரும் புயலில் இருந்து மக்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்வதற்கும் தயாராக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :
|
|