Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எல்லைப்பகுதிகளில் அதிர்வுமிக்க கிராமங்கள் திட்டம் இன்று தொடக்கம்

எல்லைப்பகுதிகளில் அதிர்வுமிக்க கிராமங்கள் திட்டம் இன்று தொடக்கம்

By: Nagaraj Mon, 10 Apr 2023 10:52:59 AM

எல்லைப்பகுதிகளில் அதிர்வுமிக்க கிராமங்கள் திட்டம் இன்று தொடக்கம்

புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளில் ‘அதிர்வுமிக்க கிராமங்கள் திட்டம்’ (விவிபி) என்ற புதிய திட்டத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

திபெத்தில் கடந்த 1951ம் ஆண்டு சீன ராணுவம் படையெடுத்தது. அதில் இருந்து இந்தியா – சீனா இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இந்தியாவில் அருணாச்சல பிரதேசம் சீனாசொந்தம் கொண்டாடுகிறது. இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டி வருகிறது. அருணாச்சல பிரதேசத்தில் 11 இடங்களுக்கு சீன அரசு கடந்த 4ம் தேதி புதிய பெயர்களை சூட்டியுள்ளது.

இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. “அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதியாகும். அருணாச்சலப் பிரதேசத்தின் பகுதிகளுக்குப் புதிய பெயர்களை வைப்பதால் உண்மையை மாற்ற முடியாது” என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. சீனாவுக்கு பதில் அருணாச்சல பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளில் ‘அதிர்வுமிக்க கிராமங்கள் திட்டம்’ (விவிபி) என்ற புதிய திட்டத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

இந்த திட்டத்தின் கீழ் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 455 எல்லை கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.

arunachal praddesh,china,india ,அமித் ஷா, திபெத், புதிய திட்டம்

துடிப்பான கிராமங்கள் திட்டம் ஹிமாச்சல பிரதேசம், சிக்கிம், உத்தராகண்ட் மற்றும் லடாக் ஆகிய மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்கு 2022 முதல் 2026 வரை 4800 கோடி செலவிடப்படும். 14 நாடுகள் சீனாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன.

இந்த 14 நாடுகளுடன் சீனா தொடர்ந்து எல்லைப் பிரச்சனையில் உள்ளது. தென் சீனக் கடல் பகுதி தனக்குச் சொந்தமானது என சீனாவும் உரிமை கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக சர்வதேச அரங்கில் சீனாவுக்கு எதிராக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் திரண்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு துணை நிற்கும் என்று அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தில் திபெத்திய பௌத்தர்களின் மிக முக்கியமான ஆன்மீகத் தளமான தவாங் புத்த மடாலயம் உள்ளது. எதிர்காலத்தில் தவாங் புத்த மடாலயத்தில் இருந்து சீனாவுக்கு எதிரான திபெத்திய புரட்சி வெடிக்கலாம் என சீனா அஞ்சுகிறது. மேலும் அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதி பூடான் எல்லையில் அமைந்துள்ளது.

அருணாச்சல பிரதேசத்தை சொந்தமாக வைத்திருந்தால், பூடானை எளிதாக ஆக்கிரமிக்க முடியும் என சீனா கருதுகிறது. இதன் காரணமாக அருணாச்சல பிரதேசம் தங்களுக்கு சொந்தமானது என சீனா தொடர்ந்து கூறி வருகிறது.

Tags :
|