Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேகமாக வந்த கார் பெண் மீது மோதி இழுத்துச் செல்லும் வீடியோ

வேகமாக வந்த கார் பெண் மீது மோதி இழுத்துச் செல்லும் வீடியோ

By: Nagaraj Sat, 04 July 2020 5:53:21 PM

வேகமாக வந்த கார் பெண் மீது மோதி இழுத்துச் செல்லும் வீடியோ

வேகமாக வந்த கார் பெண் மீது மோதி அவரை இழுத்துச் செல்லும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

டெல்லியில் அதிவேகமாக வந்த கார், சாலையில் சென்ற பெண் ஒருவர் மீது மோதியதுடன் அவர் மீது ஏறி இழுத்துச் சென்ற அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

டெல்லி சில்லா கிராமம் அருகே கார் மோதி பெண் ஒருவர் கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவருக்கு அருகில் சென்று உதவும் முன்பே கார், அந்த பெண்ணின் மீது ஏறி சிறிது தூரம் இழுத்துச் சென்றது.

accident,woman,cctv scene,alcohol addiction,car ,விபத்து, பெண், சிசிடிவி காட்சி, மது போதை, கார்

இதையடுத்து அங்கிருந்தவர்கள் காரை மடக்கிப்பிடித்தனர். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது. இதையடுத்து காரை ஓட்டிச் சென்றவரை பிடித்து விசாரித்ததில் அவர் காவல் உதவி ஆய்வாளர் என்பதும் மது போதையில் விபத்து ஏற்படுத்தியதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags :
|