Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விண்வெளியிலிருந்து மகனுடன் விண்வெளி வீரர் பேசிய வீடியோ

விண்வெளியிலிருந்து மகனுடன் விண்வெளி வீரர் பேசிய வீடியோ

By: Nagaraj Sat, 19 Aug 2023 11:04:35 PM

விண்வெளியிலிருந்து மகனுடன் விண்வெளி வீரர் பேசிய வீடியோ

குவைத்: ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்தவர் விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி. இவர் கடந்த 6 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முகமது பின் ரஷித் (எம்பிஆர்) விண்வெளி மையம் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளது. சர்வதே விண்வெளி நிலையத்தில் உள்ள சுல்தான் அல் நெயாடி பூமியில் உள்ள தனது மகனுடன் வீடியோ அழைப்பு மூலம் பேசுவதை இது காட்டுகிறது.

astronaut,international space,son,station,video, ,சர்வதேச விண்வெளி, நிலையம், மகன், விண்வெளி வீரர், வீடியோ

செப்டம்பர் 1 ஆம் தேதி பூமிக்குத் திரும்பும் அல் நெயாடியிடம், பூமியில் தனக்குப் பிடித்த பகுதி எது என்று அவனது மகன் கேட்கிறான். நீங்கள் தான் என்று அவர் பதிலளித்தார். மேலும் நீங்கள் பூமியில் இருப்பது போல் நாங்களும் இங்கு அனைத்து வசதிகளுடன் இருக்கிறோம் என்றார்.

‘என் பெயர் அப்துல்லா சுல்தான் அல் நெயாடி” என விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடியின் மகன் பூமியிலிருந்து தனது அப்பாவிடம் கேள்வியைக் கேட்கும்போது தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். தந்தை-மகன் இருவருக்கும் இடையேயான பாச பரிமாற்றத்தின் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

கடந்த 10ஆம் தேதி பகிரப்பட்ட இந்த பதிவை 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். ஏராளமானோர் லைக் செய்துள்ளனர். எங்களையும் தொடர்பு கொண்டு பேசுங்கள் என குறும்பு நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர். அல் நெயாடி ஆறு குழந்தைகளின் தந்தை ஆவார். அவரது இரண்டு மகன்கள் உம் அல் குவைனில் விண்வெளி வீரரின் ‘எ கால்பிரம் ஸ்பேஸ்’ நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

Tags :
|
|