Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய ஜெர்மன் தூதரக அதிகாரிகளின் வீடியோ

நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய ஜெர்மன் தூதரக அதிகாரிகளின் வீடியோ

By: Nagaraj Tue, 21 Mar 2023 7:33:54 PM

நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய ஜெர்மன் தூதரக அதிகாரிகளின் வீடியோ

புதுடெல்லி: ஜெர்மன் தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடினர். இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மன் இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள ‘ஆர்ஆர்ஆர்’ தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்து வருகிறது.

குறிப்பாக சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற 95வது அகாடமி விருது வழங்கும் விழாவில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. இதற்கிடையில், ‘நாட்டு நாட்டு’ பாடல் உலகம் முழுவதும் பல மொழிகளில் கொண்டாடப்படுகிறது.

country,dance,diplomats,germany,song , ஜெர்மனி, தூதரக அதிகாரிகள், நடனம், நாட்டு நாட்டு, பாடல்

அந்த வகையில் டெல்லியில் மிகவும் பரபரப்பான பகுதியான சாந்தினி சவுக்கில் ஜெர்மன் தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடினர். இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மன் இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில், ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடிய ஜெர்மன் தூதரக அதிகாரிகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் வண்ணங்கள். ஜெர்மனியர்கள் நன்றாக நடனமாடியுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

Tags :
|