Advertisement

டிரோனை ரஷ்ய போர் விமானங்கள் இடைமறித்த வீடியோ காட்சி

By: Nagaraj Thu, 16 Mar 2023 10:54:38 PM

டிரோனை ரஷ்ய போர் விமானங்கள் இடைமறித்த வீடியோ காட்சி

அமெரிக்கா: வீடியோ வெளியிட்ட அமெரிக்கா... கருங்கடலில் MQ-9 Reaper உளவு டிரோனை ரஷ்ய போர் விமானங்கள் இடைமறித்த வீடியோ காட்சியை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

உக்ரைன் போரால் பதற்றம் நிலவும் நிலையில், கருங்கடலில் பறந்த அந்த டிரோனை, ரஷ்யாவின் 2 போர் விமானங்கள் இடைமறித்ததாகவும், அப்போது டிரோன் மீது எரிபொருளை கொட்டியும், மோதியும் கீழே விழச் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

drone,camera,footage,usa,description,released ,ட்ரோன், கேமரா, காட்சிகள், அமெரிக்கா, விளக்கம், வெளியிட்டது

இதை மறுத்த அமெரிக்கா, ரஷ்ய விமானம் மோதியதால் சேதமடைந்த டிரோனை தாங்களே கருங்கடலில் விழச் செய்ததாக விளக்கம் அளித்தது.

இந்நிலையில் டிரோனில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவில் பதிவான காட்சிகளை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

Tags :
|
|
|