Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெள்ள நீரில் போக்குவரத்து சிக்னல் மின்கம்பம் மிதக்கும் காட்சி அடங்கிய வீடியோ வைரல்

வெள்ள நீரில் போக்குவரத்து சிக்னல் மின்கம்பம் மிதக்கும் காட்சி அடங்கிய வீடியோ வைரல்

By: Karunakaran Mon, 19 Oct 2020 3:52:59 PM

வெள்ள நீரில் போக்குவரத்து சிக்னல் மின்கம்பம் மிதக்கும் காட்சி அடங்கிய வீடியோ வைரல்

தற்போது தெலுங்கானா மற்றும் ஐதராபாத்தில் கடும் மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அங்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த மழை வெள்ளம் காரணமாக, அங்கு ரூ. 5 ஆயிரம் கோடி வரையிலான இழப்பு ஏற்பட்டதாக கணிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் போக்குவரத்து சிக்னல் மின்கம்பம் வெள்ள நீரில் அடித்து செல்லப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஐதராபாத்தில் எடுக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பதிவில் போக்குவரத்து சிக்னல் கம்பம் வெள்ள நீரில் மிதக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஐதராபாத்தில் எடுக்கப்பட்டதாக கூறி பேஸ்புக், ட்விட்டரில் பகிரப்பட்டு வருகிறது.

traffic signal poles,floati,flood water,hydrabad ,போக்குவரத்து சிக்னல் மின்கம்பம், மிதவை, வெள்ள நீர், ஹைதராபாத்

இதுகுறித்து ஆய்வு செய்தபோது, அது சீனாவின் யுலின் நகரில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. மேலும் இது இரண்டு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது ஆகும். அந்த வகையில் வைரல் வீடியோ ஐதராபாத்தில் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

அதன்படி, அந்த செய்தி போலி செய்தி என கண்டறியப்பட்டுள்ளது. போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்படக்கூடும்.

Tags :
|