Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அண்ணாமலையின் நடைபயணத்துக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவிப்பு

அண்ணாமலையின் நடைபயணத்துக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவிப்பு

By: vaithegi Fri, 28 July 2023 3:06:43 PM

அண்ணாமலையின் நடைபயணத்துக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவிப்பு

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலை ஓட்டி தமிழ்நாட்டில் பாஜக கட்சியை பலப்படுத்தும் நோக்குடன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று நடை பயணம் மேற்கொள்கிறார்." என் மண் என் மக்கள்" என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்கிறார். இந்நடைபயணத்தை ராமேஸ்வரத்திலிருந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.

இதையடுத்து இதுக்குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்திலிருந்து இன்று நடைபயணம் தொடங்குகிறார். அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். மாநில துணை செயலாளர் திரு.கரு. நாகராஜன் நேரடியாக வந்து அழைப்பிதழை வழங்கினார்.

greetings,vijayakanth,annamalai ,வாழ்த்து ,விஜயகாந்த் ,அண்ணாமலை

மரியாதை நிமித்தமாக தேமுதிக சார்பில், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் திரு. சிங்கை ஜின்னா மற்றும் கழகத்தினர், இந்நடைபயண துவக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள். அவரது நடைபயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து இதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,#EnMannEnMakkal நடைபயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த தேமுதிக தலைவர் அன்பு அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Tags :