Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விஜயகாந்த் நலமாக இருக்கிறார் ,விரைவில் முழு உடல் நலத்துடன் வீடு திரும்புவார் .. பிரேமலதா விஜயகாந்த்

விஜயகாந்த் நலமாக இருக்கிறார் ,விரைவில் முழு உடல் நலத்துடன் வீடு திரும்புவார் .. பிரேமலதா விஜயகாந்த்

By: vaithegi Thu, 30 Nov 2023 09:26:42 AM

விஜயகாந்த்  நலமாக இருக்கிறார் ,விரைவில் முழு உடல் நலத்துடன் வீடு திரும்புவார் .. பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது . இதையடுத்து இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “திரு. விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.

இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது”என அதில் குறிப்பிட்டது.

premalatha vijayakanth hospital ,பிரேமலதா விஜயகாந்த் ,மருத்துவமனை

இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள வீடியோவில், “இன்று காலை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை வழக்கமான மருத்துவ அறிக்கைதான். அதில் பதட்டப்படவோ, பயப்படவோ தேவையில்லை. கேப்டன் நலமாக இருக்கிறார். விரைவில் முழு உடல் நலத்துடன் வீடு திரும்பி, நம் அனைவரையும் சந்திப்பார்.

கேப்டனை மருத்துவர்கள், செவிலியர்களுடன் இணைந்து நானும் உடன் இருந்து பார்த்து கொள்கிறோம். அத்தனை பேரின் பிரார்த்தனையும் அவரை காப்பாற்றும். யாரும் எவ்விதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம். அவர் வீடு திரும்பும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.


Tags :