Advertisement

விஜயகாந்த் தற்போது பூரண நலமுடன் உள்ளார்; தேமுதிக

By: Monisha Thu, 24 Sept 2020 10:38:33 AM

விஜயகாந்த் தற்போது பூரண நலமுடன் உள்ளார்; தேமுதிக

விஜயகாந்த் தற்போது பூரண நலமுடன் உள்ளார் என்று தே.மு.தி.க. தலைமைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் (68) அவரகள் நேற்று இரவில் சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென்று சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுது செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

vijayakant,hospital,treatment,corona symptom ,விஜயகாந்த்,மருத்துவமனை,சிகிச்சை,கொரோனா அறிகுறி

இந்நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தே.மு.தி.க. தலைமைக்கழகம் கூறியிருப்பதாவது:-

விஜயகாந்த் 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக மருத்துவமனை செல்வது வழக்கம். வழக்கமான பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனை சென்றபோது கொரோனா அறிகுறி தென்பட்டது. கொரோனா அறிகுறி இருந்ததால் சிகிச்சை பெற்ற விஜயகாந்த் தற்போது பூரண நலமுடன் உள்ளார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :