Advertisement

விஜயகாந்தின் பிறந்த நாள் செல்பி படங்கள் வைரல்

By: Nagaraj Tue, 25 Aug 2020 8:06:59 PM

விஜயகாந்தின் பிறந்த நாள் செல்பி படங்கள் வைரல்

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று தனது பிறந்த நாளை குடும்பத் துடன் செல்பி எடுத்து கொண்டாடினார். இந்த புகைப்படம் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகரும் தேமுதிக பொதுச் செயலாளருமான விஜயகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள், அரசியல் கட்சித்தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், கட்சியினர் என அனைத்து தரப்பினரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

vijaykanth,selpi,photography,volunteers,social websites ,
விஜயகாந்த், செல்பி, புகைப்படம், தொண்டர்கள், சமூக வலைதளங்கள்

இதற்கிடையில், விஜயகாந்த் தனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடும்படி தனது கட்சியினருக்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று விஜயகாந்த் தனது குடும்பத்துடன் பிறந்த நாளை கொண்டாடினார். தனது மனைவி மற்றும் மகன்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். அதை, விஜயகாந்த் தனது டிவிட்டர் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Tags :
|