Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவால் இறந்த செவிலியரின் உடலை புதைக்க விடாமல் தடுத்த கிராம மக்கள்

கொரோனாவால் இறந்த செவிலியரின் உடலை புதைக்க விடாமல் தடுத்த கிராம மக்கள்

By: Nagaraj Mon, 03 Aug 2020 8:56:42 PM

கொரோனாவால் இறந்த செவிலியரின் உடலை புதைக்க விடாமல் தடுத்த கிராம மக்கள்

கொரோனாவால் இறந்த செவிலியரின் உடலை புதைக்க விடாமல் பொதுமக்கள் தடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸிடமிருந்து பொது மக்களை பாதுகாப்பதற்காக இரவு பகல் பாராமல் தனது உயிரையும் பொருட்படுத்தாது பணிபுரிபவர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள். ஆனால் அந்த மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் அவர்களது உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

ranipettai,villagers,nurse,corona,killed ,ராணிப்பேட்டை, கிராமத்து மக்கள், செவிலியர், கொரோனா, பலி

அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய அர்ச்சனா என்ற செவிலியர் திடீரென்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார். அவரது உடலை உறவினர்கள் புதைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அந்த கிராமத்து மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அர்ச்சனாவின் உடலை அடக்கம் செய்யவிடாமல் பொதுமக்கள் தடுத்ததால் சடலத்துடன் அவருடைய உறவினர்கள் தவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் ராணிப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|
|