Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் இன்று களை கட்டியது

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் இன்று களை கட்டியது

By: vaithegi Wed, 31 Aug 2022 10:38:55 PM

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் இன்று களை கட்டியது

சென்னை: தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே இதன் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவை எப்போதும் போல கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டு இருந்தது.

இதை அடுத்து இந்த ஆண்டு எந்த கட்டுப்பாடுகளும் இன்றி விநாயகர் சதுர்த்தி விழா இன்று நடைபெற்றது. இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் பல பொதுநல அமைப்பினரும் தெருக்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் இன்று களை கட்டி காணப்பட்டது.

இதனை தொடர்ந்து விதவிதமான விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வாங்கி சென்று வீடுகளில் வைத்து வழிபட்டனர். சென்னை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பெரிய விநாயகர் கோவில்கள் முதல் சிறிய விநாயகர் கோவில்கள் வரையில் அனைத்து கோவில்களிலும் இன்று காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விநாயகர் சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தது. சிறப்பு அபிஷேகங்களும் நடத்தப்பட்டன.

vinayakar chaturthi,chennai ,விநாயகர் சதுர்த்தி,சென்னை

பக்தர்கள் கொழுக்கட்டை படைத்து விநாயகரை மனமுருகி வழிபட்டனர். இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி, இந்து தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பல அமைப்பினர் சென்னையில் 2500க்கும் அதிகமான இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து வழிபாடு நடத்தினர். திருவல்லிக்கேணி, ஜாம்பஜார், மயிலாப்பூர், ராயப்பேட்டை, சூளை பட்டாளம், வியாசர்பாடி, கொளத்தூர், திருவான்மியூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சிலைகளை வைத்து இந்து அமைப்பினர் வழிபட்டனர்.

மேலும் அதிகாலையிலேயே எழுந்து பெண்கள் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்தனர். கோயம்பேடு, புரசைவாக்கம், பாரிமுனை, தி.நகர், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வணிக பகுதிகளில் சாலையோர கடைகள் அதிக அளவில் காணப்பட்டன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை வருகிற 4-ந் தேதி ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டு வருகின்றன.

Tags :