Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிம்கார்டு விற்பனையில் விதிமுறை மீறினால் கடும் நடவடிக்கை

சிம்கார்டு விற்பனையில் விதிமுறை மீறினால் கடும் நடவடிக்கை

By: Nagaraj Sat, 19 Aug 2023 07:01:49 AM

சிம்கார்டு விற்பனையில் விதிமுறை மீறினால் கடும் நடவடிக்கை

புதுடில்லி: பல்க் கனெக்சன் முறை நீக்கம்... சிம் கார்டு விற்பனையில் நடைபெறும் மோசடிகளையும், சைபர் குற்றங்களையும் தடுக்கும் வகையில் பல்க் கனெக்ஷன் எனப்படும் மொத்தமாக சிம் கார்டு இணைப்புகள் வழங்கும் நடைமுறை நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், புதிதாகவோ அல்லது ஏற்கனவே உள்ள எண்ணில் புதிய சிம் வாங்குவதற்கோ ஆதார் கார்டின் விவரங்கள் கட்டாயம் கோரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

sim card,police,violation of rules,central minister,warning ,
சிம்கார்டு, காவல்துறை, விதிகள் மீறல், மத்திய அமைச்சர், எச்சரிக்கை

எனினும் தனி நபர் ஒருவர் 9 சிம் கார்டுகள் வரை ஒரே அடையாள சான்றின் அடிப்படையில் பெறலாம் என்று அவர் கூறியுள்ளார்.

சிம் கார்டு விற்பவர்கள் காவல்துறையினரின் சரிபார்ப்பை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த விதிகளை மீறினால் 10 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

Tags :
|