Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மணிப்பூரில் இரண்டு வாரங்களுக்கு பிறகு மீண்டும் வன்முறை உச்சம்

மணிப்பூரில் இரண்டு வாரங்களுக்கு பிறகு மீண்டும் வன்முறை உச்சம்

By: vaithegi Fri, 30 June 2023 10:36:05 AM

மணிப்பூரில் இரண்டு வாரங்களுக்கு பிறகு மீண்டும் வன்முறை உச்சம்

மணிப்பூர்: பாதுகாப்பு படையினர் வன்முறையாளர்கள் இடையே நடைபெற்ற மோதலில், 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் மற்றும் பாஜக அலுவலகம் முன்பு பலர் குவிந்ததால் பரபரப்பு ..... மணிப்பூரில் கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கும் மேலாக மெய்தி மற்றும் குக்கி இனத்தவர்களிடையே மோதல் நடந்தேறி கொண்டு வருகிறது. கடந்த மே மாதம் 3ம் தேதி ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறி, அத பின்னர் கலவரமாக வெடித்தது. பல்வேறு இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடந்து வருகின்றன.

இதையடுத்து இந்த மோதலில் இதுவரை மட்டும் 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 50 ஆயிரம் பேர் வரை அங்குள்ள முகாம்களில் பாதிகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். எனவே இதன் காரணமாக கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் 16 நாட்கள் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

violence,manipur ,வன்முறை ,மணிப்பூர்


மேலும் அத்துடன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் 4 நாட்களில் மணிப்பூரில் தங்கி சமதானம் செய்ய முயன்றும் பலனளிக்கவில்லை. இந்த நிலையில் மலை மாவட்டமான காங்போக்பி யில் நேற்று பாதுகாப்பு படையினருக்கும், ஆயுதம் ஏந்தியே போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு சண்டை நடைபெற்றது. இதில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இதனால் அந்தபகுதில் மீண்டும் கலவரம் தலைதூக்கியிருக்கிறது.

இதன் இடையே மணிப்பூர் தலைநகரம் இம்பாலில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் முன்பு இரவில் திடீரென நூற்றுக்கணக்கானோர் கூடியதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் அங்கு பதற்றமான சூழல் ஒன்று எற்பட்டது.

Tags :