Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வைரஸ் காய்ச்சல் .. புதுச்சேரி, காரைக்காலில் 8 ம் வகுப்பு வரை நாளை முதல் 10 நாட்களுக்கு விடுமுறை

வைரஸ் காய்ச்சல் .. புதுச்சேரி, காரைக்காலில் 8 ம் வகுப்பு வரை நாளை முதல் 10 நாட்களுக்கு விடுமுறை

By: vaithegi Wed, 15 Mar 2023 11:57:30 AM

வைரஸ் காய்ச்சல் ..  புதுச்சேரி, காரைக்காலில் 8 ம் வகுப்பு வரை நாளை முதல் 10 நாட்களுக்கு விடுமுறை

புதுச்சேரி: நாளை முதல் 10 நாட்களுக்கு விடுமுறை .... இந்தியாவில் ஹெச்3என்2 இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரைத் தான் அதிகம் தாக்கும் என கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடவேண்டும் எனபேரவையில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் கல்வியமைச்சர் நமச்சிவாயம் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ''புதுச்சேரியில் வைரஸ் தொற்று பரவி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் போன்ற நான்கு பிராந்தியங்களிலும் ஆரம்ப பள்ளி முதல் 8- ம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் வரும் 16 முதல் 26 வரை விடுமுறை விடப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

puducherry,holiday,virus fever ,புதுச்சேரி,விடுமுறை,வைரஸ் காய்ச்சல்

இதையடுத்து இது குறித்து சுகாதாரத்துறை தரப்பில் கூறுகையில், "புதுச்சேரியில், அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு என்று பிரத்தியேக புறநோய் சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது.

எனவே எவரேனும் காய்ச்சல் சளி, இருமல் தும்மல் போன்ற அறிகுறிகளோடு மருத்துவமனைக்கு வந்தால் அவர்களுக்கு ஹெச்3என்2 வைரஸ்-க்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் இந்த வகை வைரஸ் தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரி செய்துவிடலாம்" என தெரிவித்தனர்.

Tags :